• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம்

April 27, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நேரடியாக நடத்தப்பட உள்ளது.

இதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தள கூட்ட அரங்கில் அன்று காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெறும். கோவை மாவட்ட விவசாயிகள் இந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தக்க தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க