• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வரும் 16 ந்தேதி அகில இந்திய நாய்கள் கண்காட்சி

June 13, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சியில் இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளை பூர்வீகமாக கொண்ட 44 நாய் வகை இனங்கள் கலந்து கொள்கின்றன.

ஆனைமலைஸ் கென்னல் கிளப் சார்பாக கோவையில் 11 மற்றும் 12 வது அகில இந்திய நாய்கள் கண்காட்சி வரும் 16 ந்தேதி கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆனைமலைஸ் கென்னல் கிளப்பின் தலைவர் டாக்டர் ரவி பேசுகையில்,

காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மின்பின், பக், பீகிள், பூடுல், மேலினீயஸ், லாசா அப்சா, டால்மேஷன், கிரேட்டேன், ஜெர்மன் ஷெப்பர்டு உள்ளிட்ட பல்வேறு விதமான நாய்கள் மொத்தம் 44 வகை இனங்கள் கலந்து கொள்ள உள்ளது. இதில், சில நாய் இனங்கள் இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளை பூர்வீகமாக கொண்டவை என தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய்களும், நாட்டு நாய் இனங்களான ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கண்ணி போன்றவையும் பங்கேற்கின்றன. கண்காட்சியில், நாய்களுக்கான உணவு, மருந்துக் கடைகளின் அரங்குகளும் அமைக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அர்த்தநாரி,மகேஷ்,சுப்ரமணியம்,ஹரி,சந்தோஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க