March 13, 2018
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் வரித்தொகை நிலுவை வைத்ததாக 9 குடிநீர் இணைப்புகளை மாநகராட்சியினர் துண்டித்து உள்ளனர். இந்த நடவடிக்கை தொடறும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடப்பு நிதியாண்டுக்கான சொத்துவரி குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட வரித் தொகைகளின் வசூல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வழக்கமாக உள்ள 29 வரி வசூல் மையங்கள், விடுமுறை நாட்களில் சிறப்பு மையங்கள் அமைத்து வரித்தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.வரித்தொகை செலுத்தாமல் நீண்ட நாட்களாக நிலுவை வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாநகராட்சியில் பல்வேறு மண்டலப் பகுதிகளில் இருந்து மொத்தம் 9 குடிநீர் இணைப்புகள் ஒரே நாளில் துண்டிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்த வித வரியும் செலுத்ததால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் வரி செலுத்தாத 35 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.