• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வண்ண கோலமிட்ட மைதானத்தில் பெண்கள் இணைந்து ஒயிலாட்டம் ஆடி அசத்தல்

January 24, 2021 தண்டோரா குழு

கோவையை அடுத்த கள்ளிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவில் வண்ண கோலமிட்ட மைதானத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து அசத்தலாக ஒயிலாட்டம் ஆடினர்.

தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளில் பிரதானமானது ஒயிலாட்டம். இக்கலையை, கோவை உட்பட கிராமந்தோறும் வளர்க்க, சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழு சார்பில் 5 வயது குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் இவ்வாறு பயிற்சி பெற்ற ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா கள்ளிப்பாளையம் ஆவரங்காட்டு மாரியம்மன் கோவில் மைதான வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

கலைக்குழுவின் தலைவர் சதீஷ்குமார் தலைமையில்,அன்னூர்,கோவில் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், உள்ள ஒயிலாட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில் திருமுருக நாத சுவாமி திருமடம் சுந்தர்ராச சுவாமிகள், இயற்கை வேளாண் விஞ்ஞானி அரிமா டாக்டர் மயில்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரங்கேற்றத்தை துவக்கி வைத்தனர்.

வண்ண கோலமிட்ட மைதானத்தில் தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய கலை பயிற்சி பெற்றவர்கள் இணைந்து கலைக்குழுவின் ஆசிரியை செல்வி தன்யா சிவசாமி ஒருங்கிணைப்பில் கூடி நின்று ஒயிலாட்டம் அரங்கேற்றம் நடத்தியது கூடியிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.கிராமிய கலை குறித்து ஒயிலாட்டம் ஆடி, இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழுவின் நாட்டுப்புற பாடல்கள் பம்பை இசையுடன், முளைப்பாரி, ஒயிலாட்ட சீர் வரிசையுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை, உற்சாகத்துடன் நடனமாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க