September 29, 2025
தண்டோரா குழு
வணிக வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம், மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வர்த்தக வளர்ச்சி, சில்லறை வர்த்தகத்தில் தொலைநோக்கு பார்வை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்து பல்வேறு நிறுவனங்களின் முக்கிய தலைவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஆர்.ஐ.எஸ்.இ. என்னும் நிகழ்ச்சியை கோவையில் செப்டம்பர் 26 ஆம் தேதி நடத்தியது.
இந்த நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடந்த முந்தைய பதிப்புகளின் வெற்றியைத் தொடர்ந்து, இதில் ஈடுபாட்டுடன் கூடிய முக்கிய அமர்வுகள், தொகுக்கப்பட்ட அனுபவங்கள் மற்றும் ஜீ டிவியில் வெளியிடப்படும் விளம்பரங்களின் தாக்கம் எவ்வாறு இந்தியா முழுவதும் பிராண்டுகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதை மையமாகக் கொண்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஜீ டிவியின் 50க்கும் மேற்பட்ட சேனல்களின் தொகுப்பு, ஜீ5 (ஓடிடி), யூடியூப் நெட்வொர்க், சமூக வலைதளங்கள், பிராந்திய ஐபிகள் மற்றும் நாடு தழுவிய செல்வாக்குமிக்க நெட்வொர்க் ஆகிய அனைத்தும் சிறந்த வணிக வளர்ச்சிக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி குறித்து ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் விளம்பர வருவாய், ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் பிரிவு தலைவர் லக்ஷ்மி ஷெட்டி கூறுகையில்,
“ஆர்.ஐ.எஸ்.இ. நிகழ்ச்சியானது எவ்வாறு வணிக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது இதற்கு முன் பல்வேறு நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகள் அதை நிரூபிக்கிறது. கோயம்புத்தூரின் துடிப்பான வணிக சுற்றுச்சூழல் அமைப்பு வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தின் உச்சத்தில் நிற்கும் நிலையில், தரவு சார்ந்த துல்லியம் மற்றும் கலாச்சார ரீதியாக பொருத்தமான உள்ளடக்கத்துடன் இந்தியாவின் பல்வேறு சந்தைகளில் செல்ல இந்த நிகழ்ச்சி அந்த நிறுவனங்களுக்கு உறுதுணையாக இருக்கும். 50க்கும் மேற்பட்ட சேனல்கள், ஜீ5 மற்றும் பிராந்திய நெட்வொர்க்குகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தளத்துடன், பிராண்டுகளுக்கான வளர்ச்சி பயணத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கத் தயாராக உள்ளோம், உங்களின் ஊடக முதலீடுகளை நிலையான வளர்ச்சியாக மாற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
ஒரு முதன்மை முயற்சியாகக் கருதப்படும் ஆர்.ஐ.எஸ்.இ என்பது முடிவுகள் | ஒருங்கிணைப்பு | உத்தி | ஈடுபாட்டைக் குறிக்கிறது. இந்தியாவின் சந்தைப்படுத்தல், ஊடகம் மற்றும் முதலீட்டு சமூகங்களை ஒன்றிணைக்கும் சக்திவாய்ந்த ஒன்றாக இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய வளர்ந்து வரும் சந்தையில் வளர விரும்பும் தொலைநோக்கு பார்வை கொண்ட பிராண்ட் உருவாக்குனர்கள், மூத்த சந்தைப்படுத்துபவர்கள், சில்லறை விற்பனையாளர்கள், முதலீட்டாளர்கள், புதுயுக டிஜிட்டல் வணிகங்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைத்துள்ளது. கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது, இப்பகுதியில் உள்ள நிறுவனங்களின் பிராண்டுகளை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதற்கும், அவற்றை மேம்படுத்துவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் வித்திடும் என்று ஜீ நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.