August 26, 2021
தண்டோரா குழு
நேபாள் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(24) டன்கலா(22) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் அலிசா என்ற பெண் குழந்தையும் ஒரு வயதில் ருத்ரா என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் கோவை குப்பனூர் பகுதியில் வசித்து வருகின்றனர். தோட்ட வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜ்குமார் இன்று காலை வேலைக்கு சென்று விட்டு மதிய உணவிற்காக வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது டன்கலா மற்றும் இரு குழந்தைகள் தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்து இருந்துள்ளனர். இது குறித்து ராஜ்குமார் சத்தமிட அங்கிருந்த பொதுமக்கள் பேரூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ராஜ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் இதனால் இம்முடிவை டன்கலா எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
டன்கலா உடலில் இரத்தங்கள் இருப்பதால் காவல்துறையினர் ராஜ்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.