கோவையில் வசித்து வரும் ஜெயின் சமூகத்தினர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாம் நடத்த கோரி, ஆர்.ஜி.வீதியில் உள்ள S.S.J.S.M கோவில் கமிட்டி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
கோவையில் ஜவுளி,எலக்ட்ரிகல்,என பல்வேறு துறைகளில் ஜெயின் சமூகத்தினர் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வணிகம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஜெயின் சமூகத்தினர் மற்றும் அவர்கள் சார்ந்த S.S.J.S.M கோவில் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஜெயின் கோவில் அறக்கட்டளை சார்பாக மனு வழங்கப்பட்டது.
தி.மு.க.வர்த்தக அணி அமைப்பாளர் நரேஷ் ஜெயின் தலைமையில், ஜெயின் கோவில் யூத் சங்கத்தின் தலைவர் ஸ்ரீபால் ஜெயின், ஜிட்டோ செயலாளர் பேரு ஜெயின்,மற்றும் உறுப்பினர் முகேஷ் சங்வி ஆகியோர் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கொரோனா காலங்களில் ஜெயின் அறக்கட்டளை வாயிலாக விழிப்புணர்வு பேனர்கள் அமைப்பது, நிவாரண பொருட்கள் வழங்குவது மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்குவது என கொரோனா காலத்தில் ஜெயின் சமூக மக்கள் முன்கள பணியாளர்களை போல சமூக பணியாற்றியதாகவும்,குறிப்பாக வடவள்ளியில் உள்ள அண்ணா பல்கலை கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் உணவு வழங்குவது உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தனர்.
ஆதலால் மாவட்ட நிர்வாகம் ஜெயின் சமூகத்தினர் மற்றும் அறக்கட்டளையினருக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்க இந்த மனுவை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது