February 3, 2018
தண்டோரா குழு
கோவை செட்டிபாளையம் எல்.அன்.டி பைபாஸ் சாலையில் லாரி இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கோவை செட்டிபாளையம் எல்.அன்.டி பைபாஸ் சாலையில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மற்றொரு லாரி மற்றும் இரண்டு இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் அஸ்வின், கார்த்திக், சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மற்றும் லாரி ஓட்டுநர் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.இந்த விபத்து தொடர்பாக செட்டிபாளையம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைப் மேற்கொண்டு வருகின்றனர்.