July 20, 2018
தண்டோரா குழு
கோவையில் டீசல் விலை உயர்வு,ஜி.எஸ்.டி.வரி விதிப்பு,அதிக சுங்கக் கட்டண வசூலிப்பதை குறைக்க வலியுறுத்தி இன்று முதல் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க சம்மேளனம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசைக் கண்டித்து கோவையில் இன்று காலை 6 மணி முதல் அகில இந்திய அளவில் லாரிகள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த போராட்டத்தில் கோவை லாரி உரிமையாளர்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சுமார் 10,000 லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில்,டீசல் விலையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் டீசல் விலை ஏற்றம்,மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு,சுங்கவரி கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
விரைவில் டேங்கர் லாரிகள் கண்டெய்னர்கள்,மினி ஆட்டோக்கள் உள்ளிட்டவையும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க ஆதரவு தர உள்ளதாகவும்,இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.