• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் கைது

May 30, 2019 தண்டோரா குழு

கோவையில் வீட்டுமனை பிரிப்பதற்கான அனுமதி வழங்க இராண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான சோமசுந்தரம் என்பவர் கோவையின் பல இடங்களில் ரிதல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சுந்தராபுரம் பகுதியில் புதிதாக வாங்கிய நிலைத்தை வீட்டுமனைகளாக பிரிப்பதற்கு அனுமதி வழங்க கோரி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.விண்ணப்பத்தை பரிசீலித்த தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன் தனது அலுவலக உதவியாளர் ஆனந்தகுமார் மூலம் ஆறு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.ஆனால் அதனை தர மறுத்த சோமசுந்தரம் ஐந்து லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டதுடன் அதில் முதல்கட்டமாக இரண்டரை லட்சம் ரூபாய் தருவதாகவும் சான்றிதழ் வழக்கிய பின்னர் மீத தொகையை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்த அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது மண்டல அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் உதவி நகரமைப்பு அலுவலர் சரவனன் மற்றும் உதவியாளர் ஆனந்தகுமார் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க