• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரோந்து பணியில் இருந்த காவலர்களை அருவாள் கொண்டு மிரட்டியவர்கள் கைது

June 22, 2020 தண்டோரா குழு

செல்வபுரம் காவல் நிலைய போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவை உக்கடம் பை-பாஸ் சாலையில் செல்வபுரம் பீக்காக் நகர் பகுதி ரோந்து பணியில் இருந்த போலீசார் அங்கு கும்பலாக நின்று கொண்டிருதவர்களை விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவைபுதூர் எஸ்.எம்.கார்டன் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பரின் மகன் செந்தில்குமார் (எ)குண்டு செந்தில்(51), கரும்புகடை பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த முகமது ஹுசைன் என்பவரின் மகன் உமர் பரூக்(31),குனியமுத்தூர் பி.கே.புதூர் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த இஸ்மாயில் என்பவரின் மகன் சதகத்துள்ளா(எ)ஷாஜகான் ஆகியோர் அருவாள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் இவர்கள் மூவர் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர். விசாரனையில் இருவரில் ஒருவர் மதுக்கரை பிரதான சாலை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் மாரியப்பன் (42) மற்றொருவர் ஆத்துபாலம் போத்தனூர் சாலையில் வசிக்கும் ஹுசைன் என்பரின் மகன் கபீர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து விசாரனையில் இவர்கள் ஐவரும் அசோக் நகர் பகுதியில் கொள்ளை அடிக்கும் நோக்கில் வந்தது தெரியவந்தது. செந்தில்குமார், உமர் பரூக்,சதகத்துள்ளா இவர்கள் மூவரும் கோவை மாநகர் மற்றும் புறநகர் திருப்பூர் மற்றும் கேரளாவில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் மீது விசாரனை பின்னர் வழக்கு செய்த செல்வபுரம் போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தபடுத்தபட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க