December 26, 2020
தண்டோரா குழு
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன்கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு, 20 கிராம் மு ந்திரி, 20 கிராம்
உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதனை அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 10 லட்சம் ரேஷன் கார்டுதார்களுக்கு டோக்கன் விநியோகிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.இதன்படி கோவை மாநகரில் சுங்கம், பீளமேடு, உக்கடம், ஆர்.எஸ்.புரம் என மாவட்டம் முழுவதும் உள்ள அரிசி ரேஷன்கார்டு தாரர்களுக்கு டோக்கன்
விநியோகம் செய்யும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் முதல் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து கோவை வழங்கல் துறை
அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 47 ஆயிரம் ரேஷன்கார்டுகள் உள்ளன. இதில் அரிசி ரேஷன்கார்டுகள் 10 லட்சத்து 9 ஆயிரம் பேர் வைத்து உள்ளனர்.இவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுடன் ரூ.2,500
வழங்கப்படுகிறது.எனவே இவர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி இன்று துவங்கி வருகிற 31-ம் தேதி வரை நடக்கிறது. இந்த பணியில் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.