December 13, 2020
தண்டோரா குழு
கவுகாத்தியில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் 12 மணி அளவில சிங்காநல்லூர் அருகே வந்து கொண்டிருந்தது நீலிகோணம்பாளையம் பக்கம் வரும்போது ஒரு வாலிபர் ரயில் என்ஜினில் முன்பகுதியில் சிக்கினார்.
மோதிய வேகத்தில் பலியான அந்த வாலிபரின் வாய் பகுதியில் எஞ்சினின் முன்பு உள்ள கம்பி குத்தி இழுத்து வரப்பட்டார். அதை பார்த்த மக்கள் அலறி சத்தம் போட்டனர். இதனால் ராமானுஜம் நகர் அருகே நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோவை ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் யேசு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று என்ஜின் கம்பியில் சிக்கி இருந்த அந்த வாலிபர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார்.இதனால் அரை மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. பலியான அந்த வாலிபருக்கு 25 வயது இருக்கும் மாநிறம் உடையவர் சிமெண்ட் கலரில் கருப்பு புள்ளி போட்ட முழுக்கை சட்டையும் நீல கலரில் பேண்டும் அணிந்து உள்ளார் அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. தண்டவாளத்தைக் கடக்கும்போது ரெயலில் அடிபட்டு செத்தாரா?அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.