January 29, 2021
தண்டோரா குழு
கோவையில் ரூ 2 கோடி ஜி.எஸ்.டி வரி மோசடியில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (36). இவர் அதே பகுதியில் ‘சன்ரைஸ் என்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் இரும்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு மோசடி நடப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் ஜிஎஸ்டி இணை கமிஷனர் விஜயகிருஷ்ணவேலன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது அந்த நிறுவனத்தார் இரும்பு பொருட்களை விற்பனை செய்தது போன்று போலி பில் தயாரித்து அதன் மூலம் ரூ.2 கோடி ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.