• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பது குறித்த கண்காட்சி துவக்கம்

March 5, 2018 தண்டோரா குழு

கோவையில் இந்திய ராணுவத்தின் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்த கண்காட்சி துவங்கியது.

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் இந்திய ராணுவத்தின் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்த பொருட்காட்சி துவங்கியது.இப்பொருட்காட்சியை கல்லூரி மாணவ மாணவிகள் அதிகளவில் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வந்த போது,கோவையில் பாதுகாப்புதுறை சம்பந்தமான ஒரு கண்டுபிடிப்பு மற்றும் அடைகாக்கும் மையத்தை உருவாக்க கொடிசியாவிற்கு 20 கோடி ருபாய் வழங்குவதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து கோவை பிராந்தியத்தில் உள்ள சிறு,குறு,மத்திய ரக தொழில் நிறுவனங்களால் ராணுவ தளவாடங்களில் எந்த வகையிலான பொருட்களை தயார் செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்வதற்காக பாதுகாப்புதுறை சம்பந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் நேரடியாக இந்த கண்காட்சியில் பங்கு பெறுகின்றன.உள்நாட்டிலேயே தயாரிக்கும் ராணுவ தளவாடங்களில் 400 க்கும் மேற்பட்ட பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

மேலும்,இந்த கண்காட்சியால் சிறு குறு மற்றும் மத்திய தொழில்துறை நிறுவனங்களால் ராணுவ தளாவடங்களின் பொருட்கள் குறித்த அடிப்படையை தெரிந்து கொள்வதோடு , தங்களால் எந்த மாதிரியான பொருட்களை தயாரிக்க முடியும் என்ற தெளிவிற்கும் வர முடியும் என கொடிசியா அமைப்பின் தலைவர் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கொடிசியா அமைப்பின் தலைவர் சுந்தரம் கூறுகையில்,

கோவையில் உள்ள தொழில்துறை நிறுவனங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த கண்காட்சியின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் அதீத வளர்ச்சியை எட்ட இந்த கண்காட்சி பெரிதும் உதவும்.மேலும் , இந்திய அரசாங்கம்,சென்னை,திருச்சி,கோவை,சேலம்,ஒசூர் , பெங்களூர் ஆகிய இடங்களை இணைத்து ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் வழித்தடத்தை உருவாக்க இருப்பதால் சிறு குறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களால் ராணுவத்திற்கு வேண்டிய தளவாடங்களை தயாரிப்பது எளிதாகி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பெல், இந்திய கப்பற்படை, இராணுவ படை போன்ற பத்து மேற்பட்ட  நிறுவனங்கள் இக்கண்காட்சியில் தங்களடைய தயாரிப்புகளை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளனர்.30க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் ஆள் இல்லா விமான மாதிரி, போரின் போது பயன்படுத்தப்படும் விதவிதமான துப்பாக்கி வகைகள்,கப்பலுக்கு தேவையான உதிரிப்பாகங்கள், மோட்டர் வகைகள் உள்ளிட்ட வகைகளை கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

கோவையில் முதன் முறையாக நடைபெறும் இக்கண்காட்சியின் மூலம் நமது நாட்டின் வளர்ச்சி பற்றி அதிகளவு தெரிந்துக் கொண்டதாகவும், ரசியா, அமெரிக்கா நாடுகளுக்கு இணையாக நமது நாடும் உள்ளது என்பதை இக்கண்காட்சி மூலம் அறிந்துக் கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க