April 19, 2021
தண்டோரா குழு
கோவை இருகூர் அருகே இன்று அதிகாலை காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இருகூர் அருகே இன்று அதிகாலை 4:30 மணி அளவில் தண்டவாளம் அருகே பொதுமக்கள் சிலர் சென்றுகொண்டிருந்தபோது
அப்போது உடல்கள் சிதறிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் ஜோடிகள் இன்று அதிகாலை இருகூர் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து,சம்பவ இடத்திற்கு வந்த
போலீசார் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.