• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக சமூக நீதி இயக்கத்தினர் கைது

November 18, 2019 தண்டோரா குழு

சமூகநீதி மாணவா் இயக்கம் சாா்பாக சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு நீதி கேட்டும், ஐஐடியின் ஆசிாியா் நியமன முறைகேடுகளை கண்டித்தும், ரயில்நிலைய முற்றுகை போராட்டம் மாவட்ட செயலாளா் அம்ஜத் அலிகான் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது
ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு நீதி விசாரணை வேண்டும், உடனடியாக தற்கொலைக்கு காரணமான பேராசிாியா் சுதா்சன பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்களை கைது செய்து விசாாிக்க வேண்டும், ஆசாியா் நியமனம் குறிப்பிட்ட உயா் வகுப்பினருக்கு மட்டும் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட ஐஐடி நிா்வாகம் மற்றும் மத்திய அரசுக்கு கண்டனம் தொிவித்து, தொடா் தற்கொலைகள் அரங்கேறி வரும் ஐஐடி உள்ளிட்ட மத்திய நிறுவனங்களின் நிா்வாகங்கள் வெளிப்படத் தன்மையுடனும் சமூக அமைப்புடனும் செய்பட வேண்டும், இனியும் தற்கொலைகள் ஏற்படா வண்ணம் நடவடிக்கைகள் அமைய வேண்டும் உள்ளிட்ட கோாிக்களை முன்நிறுத்தி கோஷங்கள் எழுப்பட்டன.

இதில் சமூகநீதி மாணவா் இயக்க மாவட்ட துணை செயலாளா்கள் சஃபீக், முஹம்மது அஃப்ரீத், திருப்பூா் மாவட்ட செயலாளா் ஷேக், மத்திய பகுதி செயலாளா் ஆசிக், மேட்டுப்பாளைய நகர செயலாளா் உமா், கோதா கிளை தலைவா் ரசூல், கோட்டை கிளை செயலாளா் இா்ஷத், செல்வபுரம் தெற்கு கிளை செயலாளா் சல்மான், தமுமுக நிா்வாகிகள்- தமுமுக மாவட்ட செயலாளா் முஜிபுா் ரஹ்மான், மமக மாவட்ட துணை செயலாளா் ரஜாக், மாவட்ட துணை செயலாளா் ஆசிக், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் A.M. சிராஜ்தீன்,மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளா் ஆசிக், விழி அணி ஹமீது, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஹக், மத்திய பகுதி தலைவா் இப்ராஹிம் உள்ளிட்டோா் முன்னிலை வகிக்க 50க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க