June 7, 2018
தண்டோரா குழு
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்ட நிலையில்,நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவையில் உள்ள ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.நீட் தேர்வின் காரணமாக மாணவர்களின் உயிர்கள் பறிபோவதாகவும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.மேலும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.