March 20, 2018
தண்டோரா குழு
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நடத்தப்படும் ரத யாத்திரைக்கு அனுமதியளித்ததை கண்டித்து கோவையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நாடு தழுவிய ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.ஆறு மாநிலங்களை கடந்து இன்று காலை கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் வந்துள்ளது.இந்த நிலையில் ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது 50 க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கிம் எதிராக கோஷங்கள் எழுப்பியபடியே உக்கடம் பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.இதையடுத்து கவல்துறையினர் அவர்களை கைது செய்ய முற்பட்டபோது இருதரப்பினர் இடையே லேசான தள்ளுமுல்லு ஏற்பட்டது.இதனைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.