April 14, 2018
தண்டோரா குழு
கோவையை அடுத்த போளுவாம்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட நொய்யலாற்றுப்படுகைக்கு அருகே உள்ள பகுதிக்கு காலையில் சென்ற நல்லூர் வயல் பகுதியை சேர்ந்த ராமசாமி(85) என்பவரை யானை தாக்கியது.
இதனையடுத்து அவ்வழியாக சென்ற சில பொதுமக்கள் உடனடியாக வரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.