March 30, 2020
தண்டோரா குழு
கோவை காந்திபுரம் பகுதியில் “மோடி கிச்சன் ” திட்டத்தை பா.ஜ.க பொதுசெயலாளர்
வானதி சீனிவாசன் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் துவக்கி வைத்தார். தினமும் 500 பேருக்கு உணவு வழங்கும் வகையில் இந்த மையம் செயல்படும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில் தினமும் 500 பேருக்கு உணவு வழங்கும் வகையில் “மோடி கிச்சன்” திட்டம் துவங்கப்பட்டது. 6 வது வீதியில் இதற்காக பிரத்யேக சமையல் அறை துவங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் இன்று காலை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் முறையில் துவங்கி வைத்தார்.முடிந்த அளவு மளிகை பொருட்களை , உணவு பொருட்களை இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் பா.ஜ.க வானதி்சீனிவாசன் அப்போது வலியுறுத்தினார்.
உணவு இல்லாமல் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.