April 13, 2020
தண்டோரா குழு
கோவையில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு 126 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1173 ஆக அதிகரித்துள்ளது. இன்று அதிகபட்சமாக திருப்பூரில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில்,கோவையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. கோவை இன்று இரண்டு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.