• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மேம்பால பணியின் போது தார் கொட்டியதால் வாகனங்கள் சேதம்

April 23, 2018 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்று வரும் இரண்டடுக்கு மேம்பாலப் பணியின் போது லாரியில் இருந்த தார் தவறி விழுந்து கீழ் சென்ற வாகனங்கள் மீது கொட்டியதால் வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தது.

கோவையில் காந்திபுரம் பகுதியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.முதலடுக்கு மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் அடுக்கு மேம்பால பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த சூழலில் அந்த பணியின் போது, தார் சாலை அமைப்பதற்காக லாரி மூலமாக தாரை ஏற்றி வந்துள்ளனர்.அப்போது திடீரென லாரியில் இருந்த தார் பேரல் ஒன்று கீழே கொட்டியது.உடனடியாக தார் முழுவதும் கீழே சென்ற வாகனங்களின் மீது கொட்டியது இதன் காரணமாக அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தது.

மேலும்,அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களின் மீதும் தார் கொட்டியதால் சில பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.இச்சம்பவம் நடைபெற்ற உடன் உடனடியாக லாரியின் ஓட்டுனர் தப்பி ஓடினார்.பின்னர் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில்,வாகனங்களை பழுது செய்வதற்கான தொகையை அளிக்கப்படும் என உறுதியளித்தார்.இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க