• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மேம்பாலத்திற்கான வரைபடத்தை மாற்றாமல் செயல்படுத்த வேண்டும் – நா.கார்த்திக்

February 21, 2018 தண்டோரா குழு

கோவை ஆத்துப்பாலம்,உக்கடம் வழியாக ஒப்பணக்கார வீதி வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டக்கூடிய பணிகளை ஏற்கனவே அரசினால் வெளியிடப்பட்ட வரைபடங்களை மாற்றி அமைத்து கட்டக்கூடாது என சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கேரளா மற்றும் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் கோவைக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடமான ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம் கட்ட அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால்  தற்போதையை அரசு தேர்தலை மனதில் வைத்து மக்களுக்கு பயன்படாத வகையில் கரும்புக்கடை பகுதியில் இருந்து ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம் கட்ட முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

காந்திபுரத்தில் ஏற்கனவே திட்டமிட்ட மேம்பால வரைபடத்தை மாற்றி வேறுமாதிரி கட்டியதால் தற்போது காந்திபுரம் மேம்பாலம் பயனற்று கிடக்கிறது.அதனால் இந்த மேம்பாலத்திற்கான வரைபடத்தை மாற்றாமல் செயல்படுத்தினால் தான் மக்களுக்கு பயன்பெறும் அதே வேளையில் பெருமளவிலான போக்குவரத்தையும் குறைக்க முடியும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க