November 24, 2021
தண்டோரா குழு
கோவையில் 144 கி.மீ தூரம் மெட்ரோ ரயில் திட்ட செயல்படுத்துவது தொடர்பாக aஅண்மையில் சர்வே பணிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தற்போது மண் பரிசோதனை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோவை மாவட்டத்தில் கணியூர் முதல் உக்கடம் வரை 26 கி.மீ. தூரத்திற்கும், பிளிச்சி முதல் உக்கடம் வரை 24 கி.மீ. தூரத்திற்கும், கணேசபுரம், காருண்யா நகர் முதல் உக்கடம் வரை 44 கி.மீ. தூரத்திற்கும், வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் முதல் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வரை 8 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ ரயில் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. மொத்தமாக 144 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கும் வகையில் அண்மையில் சர்வே பணி நடைபெற்றது.
கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே, அவினாசி சாலை வழிகள், பெரியகடை வீதி, உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சர்வே பணிகள் சார்டிலைட் உதவியுடன் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவையில் காந்திபுரம், அவினாசி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மண் பரிசோதனை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மண் பரிசோதனை பணிகளை முடிந்ததும் முதல் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.