• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மெட்ரோ ரயில்: ஒரு வருடத்திற்குள் திட்டம் செயல்படுத்தப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

February 6, 2019 தண்டோரா குழு

கோவையில் மெட்ரோ ரயில் ஒரு வருடத்திற்குள் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

கோவை கருமத்தம்பட்டி அடுத்த மோப்பிரிபாளையம் மற்றும் கள்ளப்பாளையம் பகுதியில் சுமார் 375 ஏக்கர் பரப்பளவிலான கொடிசியா தொழிற்பூங்காவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

அப்போது மேடையில் பேசிய அவர்,

ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக இணையதள ஒற்றைசரள முறை ஏற்படுத்தப்பட்டு புதிய முதலீடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த தொழில் நகரமான கோவையில் தொழில் வளர்ச்சிக்கு கொடிசியா அமைப்பு உதவி வருகின்றது. கோவை மாநகரில் புதிய மெட்ரோ ரயில் சேவை திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகின்றது. ஒரு வருடத்தில் அது நிறைவடையும். விமான நிலைய விரிவாக்கம் பணிகள் விரைவில் துவங்கும். கோவை மாவட்டத்தில் நடைபெறும் மேம்பால பணிகள் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக 2961 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கள்ளபாளையம், மோப்பிரிபாளையம் பகுதிகளில் 375 ஏக்கர் நிலத்தில் இந்த கொடிசியா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு வசதிகளும் இந்த அரசு வழங்கும். குறைந்த விலையில் பிளாஸ்டிக் பொருரட்களுக்கு மாற்று பொருட்கள் செய்ய குறு தொழில் துறையினர் உதவ வேண்டும். கொடிசியா பகுதியில் இந்த தொழில் பூங்கா அமைய உதவி புரிந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு நன்றி. சிறுதொழில்களை ஊக்குவிக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். பெரிய தொழில்கள் ஊக்கு வைக்கும் சிறு தொழில்கள் வளரும். தொழில் பூங்கா அமைக்கும் போது பல பிரச்சினைகள் இருப்பதை போல அரசை நடத்தும் போது பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. பல்வேறு பிரச்சினைகள் அரசியல் கட்சிகளால் உருவாக்கப்படுகின்றது என விமர்சனம் செய்தார்.

முதலீட்டாளர் மாநாடு மூலம் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டதை அரசியலாக்க பார்க்கின்றனர் என புகார் தெரிவித்த முதல்வர் இதை அரசியலுக்கு அப்பாற்றபட்டு பார்க்கவேண்டும் என சுட்டிக் காட்டிய அவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் தொழில் வளர்ச்சிக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் தொழில்கள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் கூறினார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதில் முதல் இடத்ததில் இருக்கின்றது. 5 நிகழ்ச்சி என வைத்து விட்டு 30 நிகழ்ச்சிக்கு அமைச்சர் வேலுமணி ஏற்பாடு செய்துவிட்டார் என அதன் காரணமாக இன்று தாமதம் ஏற்பட்டு விட்டது என விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க