February 14, 2021
தண்டோரா குழு
கோவையில் மெட்ரோ ரயிலுக்கான ஆய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை நேரு உள்நாட்டு விளையாட்டு அரங்கில் பெற்ற விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்திற்கு புதிய திட்டங்களை துவங்கி வைக்க வந்துள்ள பிரதமருக்கு நன்றி. பிரதமர் துவங்கி வைக்கும் திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும். பிரதமரின் நடவடிக்கையால் கொரோனா தொற்று விரைவாக தடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்திலும் முதலீட்டாளர்களை ஈர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கொரோனா காலத்தில் தமிழக அரசின் பணிகளை பாராட்டிய பிரதமருக்கு நன்றி.மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருந்த மத்திய அரசுக்கு நன்றி.கோவையில் மெட்ரோ ரயிலுக்கான ஆய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.