December 4, 2021
தண்டோரா குழு
கோவை கீரணத்தம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாயம்மாள் (70). இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்கு நடந்து சென்றார்.
அப்போது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவரை பின்தொடர்ந்தனர். அந்த வாலிபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தாயம்மாளின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்தனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த தாயம்மாள் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அதற்குள் அந்த வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தாயம்மாள் தனது பேரன் ரங்கநாதனை அழைத்து சென்று கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.