• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது – காவல் ஆணையர்

March 12, 2020 தண்டோரா குழு

கோவையில் முன்னெரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,இரவு நேரங்களில் 40 இடங்களில் வாகனத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது

கோவையில் கடந்த ஒரு வாரமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் மூன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் என்பவர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இரண்டு வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெறுக்கத்தக்க வகையில் பேசிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரவு நேரங்களில் 40 இடங்களில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி கோவையில் முகாமிட்டுள்ளார். பாதுகாப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பத்திகையாளர் சந்திப்பின் போது சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் உடனிருந்தார்.

மேலும் படிக்க