• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

October 30, 2020 தண்டோரா குழு

முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையோட்டி முத்து ராமலிங்கத்தேவரின் சிலைக்கு தென் இந்தியா பார்வட் பிளாக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் தேசிய தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான முத்து ராமலிங்கத்தேவரின் 113 வது ஜெயந்தி மற்றும் 58 வது குரு பூஜை விழா இன்று கடைபிடிக்கப்படுவதால் இன்று தமிழக முழுவதும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் இதே போல் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு கோவை மாவட்ட தென் இந்திய பார்வட் பிளாக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டோர்க்கு அன்னதானம் வழங்கப்படுவதுடன் ரத்த தான முகாம் நடைபெறுவதாகவும்,அனைவரும் ஒன்றிணைந்து இவ்விழாவை கொண்டாட வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுவதாக மாவட்ட தலைவர் சஞ்சய்குமார் தெரிவித்தார். இதில் தென்னிந்திய பார்வட் பிளாக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க