• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதல் முறையாக பொதுமக்களுக்கான மொபைல் டிராலி சைக்கிள் டிஸ்பென்சர் R.O வாட்டர் அறிமுகம்

September 30, 2024 தண்டோரா குழு

சென்னையில் செயல்பட்டு வரும் காஜா ஜில் வாட்டர் கேரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தற்போது கோவையில் உள்ள அக்குவா கிளேன் நிறுவனம் மற்றும் ரேணுகா சைக்கிள் நிறுவனத்தின் மூலம் தண்ணி டிஸ்பென்சர் மெஷின் (நடமாடும் டிராலி சைக்கிள் டிஸ்பென்சர் R.O வாட்டர்) என்ற புதிய திட்டத்தை இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பூர்விகா மொபைல் ஷோரூம் அருகே அறிமுகப்படுத்தியுள்ளது.இதனை காஜா ஜில் வாட்டர் கேரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.உசேன் வகாப் துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

காஜா ஜில் வாட்டர் கேரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களை உருவாக்கவும் அதன் மூலம் படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்திட ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வாட்டர் பாக்கெட் தடை செய்யப்பட்டுள்ளதையடுத்து, பொதுமக்களின் தேவைக்காக எங்கள் நிறுவனத்தின் சார்பில் மொபைல் டிராலி சைக்கிள் டிஸ்பென்சர் R.O வாட்டர் என்ற புதிய திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் ஜில் மற்றும் கூல் இல்லாத சாதாரண தண்ணீர் 250 மில்லி டம்ளரில் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம்.

சுத்தரிக்கப்பட்ட சுத்தமான தண்ணீர் வழங்குவது மூலம் பொதுமக்கள் சுகாதாரமாக இருக்கவும் மற்றும் உடல் நலம் பாதிக்காமல் இருக்கவும்,பொது இடங்களில் கிடைக்கும் வகையில் வணிக பகுதி , மார்க்கெட் மற்றும் சாலையோர பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வேலைகளுக்கு செல்பவர்களுக்கு மலிவு விலையில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளோம். இதன் மூலம் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும், இதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்க முடியும். தற்போது இந்த திட்டம் கோவையில் இன்று துவக்கப்பட்டது பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆண் பெண் முதியோர்கள் காவல்துறையினர்கள் கூலித்தொழிலாளிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்

இதில் காஜா ஜில் வாட்டர் கேரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே உசைன் வஹாப் மற்றும் அக்குவா கிளேன் உரிமையாளர் குருசாமி, ரேணுகா சைக்கிள் உரிமையாளர் லட்சுமணன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க