• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதல் முறையாக நடைபெற்ற பொதுமக்கள் பட்டம் விடும் திருவிழா

June 16, 2024 தண்டோரா குழு

தமிழகத்தின் முதல் பொதுமக்கள் பட்டம் விடும் திருவிழா (கைட் கார்ணிவல்) கோவையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

நம் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான பட்டத்தினை,இன்றைய தலை முறையினரின் கரங்களில் கொண்டு சேர்க்கும் முயற்சியாக நிகழ் மீடியா மற்றும் லூனி ஸ்டூடியோஸ் இணைந்து பிரம்மாண்ட பட்டம் விடும் திருவிழா ஞாயிறு அன்று காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை,நவஇந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தா ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தொழில் முறை பட்டம் விடுபவர்களின் பட்ட கண்கா ட்சி , பட்டம் விடுவதில் மக்களின் பங்கேற்பு, மேஜிக் ஷோ , பொம்மை பட்ட வேடிக்கை கள், பாடகி ஸ்ரீ நிஷா ஜெயசீலன் இசை கச்சேரி, குழந்தை களுக்கான விளையாட்டுகள், கைவினைப் பொ ருட்கள் கண்காட்சி மற்றும் பல்சுவை உணவு அங்காடிகள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆறு அதிர்ஷ்டசாலிகளுக்கு குலுக்கள் பரிசும் வழங்கப்பட்டது.

நிகழ் மீடியா குழுவை சேர்ந்த கார்த்திகா, பிரியங்கா,ஜீவிதா,லோனி ஸ்டியோ ஷருஹான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலும், பத்து வயதிற்குப்பட்ட குழந்தை களுக்கு அனுமதி இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் ஐந்து நபர்களுக்கு மேல் குழுக்களாக வருபவர்களுக்கு நுழைவு கட்டணத்தில் 30 சதவீதம் சலுகை வழங்கப்பட்டது.

மேலும் படிக்க