• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதல் முறையாக ஜெர்மன் உணவு திருவிழா “ஜெர்மன் அக்டோபர்பெஸ்ட்” நவம்பர் 24 அன்று துவக்கம்

November 22, 2023 தண்டோரா குழு

கோவையில் முதல் முறையாக “ஜெர்மன் அக்டேபர்பெஸ்ட்” விழாவை கோத்தே சென்ட்ரம் கோயம்புத்தூர் நடத்துகிறது. ஹோட்டல் ரத்னா ரிஜென்டில் வரும் நவம்பர் 24 (வெள்ளிகிழமை) முதல் 26 முடிய 3 நாட்கள் நடக்கிறது. இந்த நிகழ்வு 24 மற்றம் 25-ம் தேதி வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 11 மணி வரையும், 26 – ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரையும் பின்பு மாலை 5.00 மணி முதல் இரவு 11 மணி வரையும் நடைபெறும்.

முக்கிய நகரங்களில் கொண்டாடப்படும் சிறப்பான விழாக்களை போலவே “ஜெர்மன் அக்டேபர்பெஸ்ட்” என்பது ஜெர்மனியில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.

ஜெர்மன் மொழி மற்றும் கலாச்சாரத்தை உணர்த்தும் அதிகாரப்பூர்வமான ஒருங்கிணைந்த பங்குதாராக செயல்பட்டு வருகிறது கோத்தே இன்ஸ்டியுட்ஸ். கோயம்புத்தூர் கோத்தே சென்ட்ரம், தென்னிந்திய அளவில் பவேரியன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியை கொண்டாட விரும்புகிறது. இதற்கென ஜெர்மன் ரினெலன்ட் பாலடினடேவில் உள்ள சமையல் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு. கர்ட் ஹென்கென்ஸ்மியர் கோவை வந்துள்ளார். நவம்பர் இறுதி வரை இங்கு தங்கியிருப்பார். உலகத்தரம் வாய்ந்த ஜெர்மன் நாட்டு சமையலை விருந்தளிக்க உள்ளார்.

இந்த கொண்டாட்டத்துடன் செவிக்கும் விருந்தளிக்க “ப்ளெச்ஸாவ்க” ஜெர்மன் இசைக்குழுவினர் வந்துள்ளனர். மூன்று நாட்களும் இவர்கள் ஜெர்மன் அக்டோபர்பெஸ்ட் இசையை இசைக்கவுள்ளனர். இவர்கள் அர்மீன் செய்பெர்ட் தலைமையில் வந்துள்ளனர். ஐரோப்பா முழுவதும் தங்களது சொந்த பாடலுக்கு இசையமைத்து 500-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இவர்கள் நடத்தியுள்ளனர். இவர்கள் ஜெர்மனி இசைக்கருவிகளான பரிடோன், ட்ரம்போன், ஏர்ஹரன், சாக்ஸாபோன், ப்ளுஜெல்ஹார்ன், டிம்பட் மற்றும் பல கருவிகளை கித்தார் உடன் வாசிக்கின்றனர். இத்தகைய இசை நிகழ்ச்சி கோவையில் நடப்பது இதுவே முதல் முறை.

ஜெர்மனில் உள்ள பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ள அனைத்து வயதினருக்கும் கொண்டாட்டமும் குதூகலமும் உறுதியானது. கோத்தே சென்ட்ரம், அப்படியே ஜெர்மன் உணவையும், பானங்களையும் உங்களது மேசைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

கோவையில் இயங்கி வரும் பல்வேறு ஜெர்மன் நிறுவனங்களில் பணியாற்றுவோர், ஜெர்மன் மொழியை, கலாச்சாரத்தை இங்கே உணர்த்தவுள்ளனர். நமக்குள் உள்ள ஜெர்மன் நட்புணர்வை இது உணர்த்த இது ஒரு முக்கிய தருணம்.

இதற்கான டிக்கெட் அரங்கின் நுழைவாயிலிலும், கோத்தே சென்ட்ரம் நிறுவனத்திலும், புக்மைஷோ இணையத்திலும் கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு – 95855 22044 தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்க