February 19, 2021
தண்டோரா குழு
கோவையில் இரண்டு நாட்களுக்கு சிறு சிறு வியாபாரிகள் ஒன்றாக கூடி பொருட்களை விற்கும் நிகழ்வு சந்தையை ரோட்டரி கிளப் ஆஃப் ஸ்மார்ட் சிட்டி ஏற்பாடு செய்துள்ளது.
சிறு சிறு வியாபாரிகள் ஒன்றாக கூடி பொருட்களை விற்கும் நிகழ்வு சந்தை. இந்த சந்தை வியாபாரம் தற்போது உள்ளரங்குகளிலும், வெளியிடங்களிலும் சில சமயம் இரண்டிலுமே நடக்கின்றன. பர்ப்பிள் துலிப் என்ற பெயரில், ராகி ஷா, நகர்ப்புறங்களுக்கு ஏற்றவாறு மறுவடிவமைப்பு செய்துள்ளார். கோவையில் முதல்முறையாக இரண்டு நாட்கள், பரவசமூட்டும் வகையில் நடக்கவுள்ளது.
நாடு சுயசார்பு மிக்கதாக மாறி வரும் இந்த சூழ்நிலையில், கோவையின் மேன்மைக்காக, பிளாஸ்சம் பிலியா என்ற இந்த சந்தை, நடத்தப்படுகிறது. 45 க்கும் மேற்பட்ட வீட்டு பொருட்கள், தயாரிப்புகள், உணவு வகைகள், கலை நயமிக்க ஓவியங்கள் மற்றும் பல இடம் பெறுகின்றன. கோவை அவிநாசிரோட்டில் உள்ள ஜென்னி கிளப்பில் இரண்டு நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில், ஷாப்பிங் செய்யலாம்; சாப்பிடலாம்; பொழுதுபோக்கு நிகழ்வுகளை கண்டு ரசிக்கலாம். பாலிவுட் டிஜே இஷா மற்றும் பிரபல தொகுப்பாளர் சரிதா ரகுவன்ஷி பங்கேற்று மகிழ்விக்கின்றனர்.
பாரம்பரியமிக்க வகையில், அதிநவீனமுறையில் மனதை தொடும் வகையில், மிகழ்ச்சியான கொண்டாட்டமாக இது இருக்கும். இந்த பிலியா சந்தை, 2021 பிப்ரவரி 19 மற்றும் 20 தேதிகளில் காலை 11.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடக்கிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பிக்கி எப்எல்ஓ வின் தலைவர் பிரீத்திகா பாலாஜி, நகை வடிவமைப்பாளர், பேஷன் டினைர் அபர்ணா சங்கு, டை அமைப்பின் தலைவர் ரஞ்சனா சிங்கால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் முதல் பெண்மணி ரஷ்மி நந்தா, செயலாளர் டாக்டர் ரோஹிணி சர்மா, கோவை ஷாப்பிங் மாடல் மற்றும் தொகுப்பாளர் கவிதா ரமேஷ், பிளாக்கர் மற்றும் கருத்தாளர் அனாமிகா கஜாரியா பங்கேற்றனர்.
இந்த பர்ப்பிள் துலிப் நிகழ்வில், கலை நயமிக்க, பரவசமூட்டும் பல பொருட்கள், நிபுணர்களின் உணவு தயாரிப்பு முறைகள், கதைகள் உள்ளிட்ட பொழுது போக்கு நிகழ்வுகள் நடக்கவுள்ளன. திறமையை வெளிப்படுத்தவும், அறுசுவை உணவுடன், மனமகிழ்வுக்கான நிகழ்வுகளை ரசிக்கவும், இசை நடன நிகழ்வுகளும் நடக்கவுள்ளன. இந்த நிகழ்ச்சியை நடத்த கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஸ்மார்ட் சிட்டி ஆதரவு அளித்துள்ளது.
நுழைவு கட்டணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.