February 19, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் 47 வருடங்களாக மருத்துவத் துறையில் முன்னோடியாக திகழ்ந்து வரும் கேஜி மருத்துவமனை தற்போது தீவிர அவசர சிகிச்சை துறை சார்பில் ஒரு வருடம் செவிலியர் பயிற்சி பெறும் பயிற்சி வகுப்பினை ஒரு மாதத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சிக்கான சான்றிதழ்கள் கேஜி மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான முதல் மாதம் பயிற்சி வகுப்பில் பயின்ற 14 செவிலியர் மாணவர்களுக்கு கேஜி மருத்துவமனை தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஜி பக்தவச்சலம் பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
47 வருடங்களாக தீவிர அவசர சிகிச்சை பிரிவில் முன்னோடியாக திகழ்ந்து வரும் கேஜி மருத்துவமனை தற்போது புதுப்பொலிவுடன் அனைத்து விதமான தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோவை மாவட்டத்தில் தீவிர அவசர சிகிச்சை துறை சார்பில் முதல் முறையாக பயிற்சி வகுப்புகள் செவிலியர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கான பயிற்சி வகுப்புகள் ஒரு மாதத்தில் கற்பிக்கப்படுகிறது. இதற்காக 15 பாட வகுப்புகளை 22 சிறந்த மருத்துவர்கள், 4 செவிலியர்கள் மற்றும் 5 எமர்ஜென்சி டெக்னீசியன்கள் உள்ளிட்டோர்கள் மூலம் அனைத்து விதமான சிகிச்சைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.