• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதல்முறையாக மகளிருக்கான இரவு நேர மாரத்தான்

February 25, 2023 தண்டோரா குழு

கோவையில் முதல்முறையாக ஜெம் அறக்கட்டளை சார்பில்மகளிருக்கான இரவு நேர மாரத்தான் போட்டி 3000 ககும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

ஜெம் மருத்துவமனையின் இலாப நோக்கற்றஅமைப்பான ஜெம் அறக்கட்டளை, கோயம்புத்தூர் மகளிர் மாரத்தான் போட்டியின் முதல்பதிப்பை பிப்ரவரி 25, 2023 இன்று வ.உ.சி மைதானத்தில் இரவு ஓட்டமாக நடைபெற்றது.இது தமிழ்நாடு தடகள சங்கத்தின் அங்கீகாரம் பெற்றது மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க நிதி திரட்டும் முயற்சியாக இந்த போட்டி நடைபெற்றது.

உலகப் புகழ் பெற்ற லேப்பராஸ் கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். சி. பழனிவேலு அவர்களால் நிறுவப்பட்ட ஜெம் அறக்கட்டளை, கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு மருத்துவ முகாம்கள், ஏழை எளிய மக்களுக்கு இலவச அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மாணவர்களுக்கு கல்வி உதவிகள் போன்றவற்றின் மூலம் சமூகத்திற்கு சேவை செய்து வருகிறது.

ரோட்டாரி கிளப் மற்றும் மெட்ரோபோலிஸ் அமைப்பின் மூலம் 100 நோயாளிகளுக்கு சுமார் 3 கோடி மதிப்பிலான அறுவை சிகிச்சைகள் ஜெம் மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டது.மகளிருக்கான மாரத்தான் போட்டி மாலை 7 மணிக்கு வ.உ.சி மைதானத்தில் தொடங்கி அதே இடத்தில் முடிவடைந்தது.3 கி.மீ, 5 கி,மீ, மற்றும் 10 கி.மீ மற்றும் 21 கி.மீ என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.

நிகழ்விற்கு 3000க்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்துள்ளனர். இது மிகப்பெரிய பங்கேற்புகளில் ஒன்றாகும்.RTO அலுவலக சாலை 3 கி.மீ,. ரேஸ்கோர்ஸ் வழியாக 5 கி.மீ., ரேஸ் கோர்ஸ்வழியாக திருச்சி சாலை மேம்பாலம் 10 கி.மீ., வழித்தடமாக உள்ளது. ஓட்டப்பந்தய வீரர்களுக்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை மற்றும் அமைப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர்.ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஓட்டத்திற்குப் பிறகு நடைபெற்றது.

ஜெம் அறக்கட்டளையானது பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுய மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்தது. மேலும் பகல், இரவு எனஎந்த நேரத்தையும் பொருட்படுத்தாமல் பெண்கள் நடமாட ஒரு பாதுகாப்பான நகரத்தை உருவாக்குவது இதன் நோக்கமாக கொண்டது.

மேலும் படிக்க