March 18, 2020
தண்டோரா குழு
கோவையில் முதலீடு செய்தால் அதிக தொகை தருவதாகக் கூறி ரு.25 கோடி மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போத்தனூர் அருகே உள்ள கோணவாய்க்கால் பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பவரது மனைவி கிளாராவின்னரசி(34).இவர்களிடம் கடந்த 2017-ம் ஆண்டு குன்னூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மணி என்பவர் தனியார் சிமெண்ட் அதிகாரியிடம் தான் வேலை செய்வதாவும் அந்த நிறுவனத்தி்ல் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளார். மேலும் முதலீட்டு தொகைக்கு ஏற்ப மாதந்தோறும் லாபம் தருவதாக கூறியதை நம்பி கிளாரவின்னரி மணியிடம் 5,20,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பணத்தைப்பெற்றுக்கொண்ட மணி பல மாதங்களாக லாபம் குறித்து எதுவும் பேசாமல் காலம் தாழ்த்தி வந்த்தாகவும்,கட்டிய முதலீட்டை திருப்பி கேட்கப்பட்டபோது உரிய பதில் தராமல் அலைகழித்துவந்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணரந்த பிரபு கிளாராவின்னரசி தம்பதியினர் கோவை மாவட பொருளாதார குற்றபிரிவில் புகார் அளித்தார்.அதன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மணி கிளாராவின்னரசியிடம் மோசடி செய்தது மட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களிடம் 25கோடி ரூபாய் வரை மோசடி செய்த்து தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மணியை கைது செய்த பொருளாதார குற்றபிரிவு போலீசார், நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தி சிறையலடைத்தனர். மேலும் இந்த மோசடியில் மணிக்கு உறுதுணையாக இருந்த கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த மஞ்சுநாதன் என்பவரை தேடி வருகின்றனர்.