• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதன் முறையாக நடைபெறும் வைப்ரண்ட் கொங்குநாடு குளோபல் கோயமுத்தூர் கண்காட்சி

January 8, 2020 தண்டோரா குழு

கொங்குநாட்டு பகுதியில் பன்னோக்கு துறையில் உள்ள வணிகத்தை அதிகரிக்கும் பொருட்டு வைப்ரண்ட் கொங்குநாடு குளோபல் கோயமுத்தூர் கண்காட்சி மற்றும் மாநாடு கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ளது.

கொங்குநாட்டு பகுதிகளான கோவை,ஈரோடு,திருப்பூர்,உள்ளடக்கிய மாவட்ட இறக்குமதியாளர்கள், முதலீட்டாளர்கள்,உற்பத்தியாளர்கள், தொழில் நுட்பவியாளர்கள், சேவை அளிப்போர் மற்றும் வணிகர்கள் என அனைவரும் பயன்படும் வகையில் கோவை கொடிசியாவில் வரும் அக்டோபர் மாதம் வைப்ரண்ட் கொங்குநாடு குளோபல் கோயமுத்தூர் கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இது குறித்து குளோபல் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தலைமை ஆலோசகர் ஆன டாக்டர் ஜெகத் ஷா பேசுகையில்,

கொங்கு நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள்,சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் நுட்பங்களில் உள்ள புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்த நிகழ்வு பயனுள்ளதாக அமையும் எனவும், கொங்குநாட்டு பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு சர்வதேச நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களோடு இணைப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த சர்வதேச கண்காட்சி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார் மேலும் இதில் சர்வதேச அளவில் பெயர் பெற்ற அங்கீகாரம் பெற்ற கொங்கு நாட்டு வணிகர்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க