• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதன் முறையாக துவங்கப்பட்ட குத்துச் சண்டை பயிற்சி மையம்

March 2, 2019 தண்டோரா குழு

கோவையில் முதன் முறையாக குத்துச் சண்டை பயிற்சி வீரர்கள் பயிற்சி பெறுவதற்கென பயிற்சி மையம் துவங்கப்பட்டது. இதன் வாயிலாக வரும் காலங்களில் ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் நிச்சயம் கோவையை சேர்ந்த குத்து சண்டை வீரர்கள் பதக்கம் பெறுவார்கள் என பயிற்சி மையத்தின் பயிற்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த குத்து சண்டை வீரர்கள் பயிற்சி பெறுவதெற்கென மையம் அமைக்க கோரி குத்துச்சண்டை வீரர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் கோவை சூப்பர் பாக்சிங் அகாடமி உறுப்பினர்களின் தீவிர முயற்சியின் காரணமாக நேரு ஸடேடியம் எதிரே உள்ள இடத்தை மாநகராட்சி நிர்வாகம் குத்துச்சண்டை பயிற்சி மையம் அமைப்பதற்கென இடத்தை ஒதுக்கியது.

இந்நிலையில் 10 இலட்சம் ரூபாய் மதிப்பில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு,அதற்கான துவக்க விழா இன்று நடைபெற்றது. பயிற்சி மையத்தை சமூக ஆர்வலர் அன்பரசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பாக்சிங் பயிற்சி மையத்தின் பயிற்சியாளரும் ,முன்னால் இராணுவ வீர்ருமான மயில்சாமி முதல் குத்துச்சண்டை போட்டியை துவக்கி வைத்தார். இந்த பயிற்சி மையம் 80 அடி நீளம் , 35 அடி அகலம் கொண்ட இடத்தில், 25 அடி நீளம் , 25 அடி அக லம் என சதுர வடிவில் பயிற்சி பெற அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 3 அடி உயரத்தில், ரிங் ‘ என்றழைக்கப்படும் குத்துசண்டை போட் டிக்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது . போட்டி மேடையை சுற்றி நான்கு மூலைகளிலும் 6 அடி உயரத்திற்கு 4 கம்பங்கள் நடப் பட்டு . ‘ ரிங் ‘ மேடையை சுற்றிலும் கயிறுகளால் கட்டப்பட்டு போட்டிகள் நடக்க உள்ளன. மேலும் வெயில் , மழை பாராது போட்டி நடத் துவதற்கு , 16 அடி உயரத்திற்கு சுற்றிலும் மேற்கூரை அமைக்கப் பட்டுள்ளது .

இது குறித்து பாக்சிங் பயிற்சியாளர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கோவை சூப்பர் பாக்சிங் அகாடமி , உறுப்பினர்களின் பெருமுயற்சியால் கோவையில் நீண்ட காலமாக பாக்சிங் பயிற்சி பெறுபவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் இந்த பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளதாகவும், பெண்களும் பயிற்சி பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குத்துச்சண்டை பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதனால் வரும் ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயமாக கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பதக்கம் பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க