June 12, 2018
தண்டோரா குழு
தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுக்க கோரி,கோவையில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினருக்கும்,காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுக்க கோரியும்,ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த கோரியும்,இந்திய மாணவர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.இதன் ஒரு பகுதியாக அவ்வமைப்பினர் டவுன்ஹால் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும்,போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்ட போது,இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.