• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதன்முறையாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ‘ஒருங்கிணைந்த மூளை மற்றும் மனநல சிகிச்சை மையம்’

July 22, 2021 தண்டோரா குழு

கோவையில் முதல்முறையாக ஒருங்கிணைந்த மூளை மற்றும் மனநல சிகிச்சை மையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

கோவையில் தலைசிறந்த சென்னையில் உள்ள புத்தி கிளீனிக்குடன் (Buddhi Clinic) இணைந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில்,ஒருங்கிணைந்த மூளை மற்றும் மனநல சிகிச்சை மையத்தை 12.07.2021 திங்கட்கிழமையன்று தொடங்கப்பட்டுள்ளது.
இச்சிறப்புமிகு மையத்தை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, புத்தி கிளீனிக் நிறுவனர் டாக்டர் இ.எஸ். கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் குத்து விளக்கேற்றித் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை இயக்க அலுவலர்ஸ்வாதி ரோஹித்,தலைமைச் செயல் அலுவலர், சி.வி.ராம்குமார்,ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் & முதன்மையாளர் டாக்டர் பி.சுகுமாரன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவர்கள்,உயர் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

பழங்கால மருத்துவமுறைகளை, நவீன அறிவியலில் புகுத்தி, மூளை மற்றும் மனநல நோயாளிகள் மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சினைகளைக் கொண்ட நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளித்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ‘Integrated Brain and mind Therapy’ சிகிக்சையின் முக்கிய நோக்கமாகும்.
ஒருங்கிணைந்த மூளை மற்றும் மனநல சிகிச்சையானது,‘நோயாளிகளுக்கு நீண்டநாள் சுமையான நாள்பட்ட கோளாறுகள் மீது தனிகவனம் செலுத்தி, புத்துணரச்சியை மீட்டெடுத்து மறுவாழ்வு பெறச் செய்து, அவர்களின் உடல்நலனை மேம்படுத்துவதாகும். இந்த அணுகுமுறையானது நோயுடன் பயணிக்கும் நோயாளிகளுக்கு ஆறுதல் அடையச் செய்து, அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அளிப்பதாகும்.

இம்மையத்தின் சிகிச்சையானது நம் நாட்டின் ஆற்றல் மிக்க முழுமையான ஆயுர்வேத முறையுடன் நவீன மறுவாழ்வு அறிவியலை உள்ளடக்கிய பாரம்பரிய சிகிச்சை முறையைக் கொண்டது. 14 வகையான மருந்தில்லா சிகிச்சை முறைகளையும் உள்ளடக்கியது. 360 டிகிரியில் நோயாளிகளின் உடல், மனம் மற்றும் மனநலனை பழங்கால முறையில் மதிப்பீடு செய்து, நவீன மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து பயனடையச் செய்கிறது.’

தனித்துவமிக்க ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை Sri Ramakrishna Hospital | Best Multi Specialty Hospital | Top Hospital In Coimbatore மூளை மற்றும் மனநல சிகிச்சை மையத்தில், ‘Cookie-cutter’ அணுகுமுறையின் மூலம் நோயாளிகளின் பிரச்சினைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும். இடைநிலை செய்முறை இயக்கத்தைப் பயன்படுத்தி, மருத்துவ ஆராய்ச்சி முறைகளின் படி, துல்லியமான தனித்துவமிக்க மருத்துவ உத்திகளைக் கையாண்டு அளிக்கப்படும் சிகிச்சையால் நரம்பியல், மூளை மற்றும் மனநல நோயாளிகள் உடல் சார்ந்த கோளாறுகளில் இருந்து விடுபட்டு, நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.

இந்த மையத்தில் அளிக்கப்படும், Transcranial Magnetic Stimulation (TMS) சிகிச்சையானது நரம்பியல் மற்றும் மனநல கோளாறுகளில் இருந்து நோயாளிகளை விடுவித்து, அவர்களை நல்ல நிலையை அடையச் செய்யும். Transcranial Direct Current Stimulation (tDCS) சிகிச்சையானது, நோயாளிகளின் தலையில் தாழ்வழுத்த மின்னாற்றலைப் பாய்ச்சி மூளையை சரியான பாதையில் இயங்கச் செய்வதாகும். Transcutaneous auricular Vagus nerve Stimulation (taVNS) சிகிச்சையானது மனித நரம்பு மண்டலக் கிளைகளைச் சீரமைப்பதாகும்.

புத்தி கிளீனிக்;

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், புத்தி கிளீனிக், சர்வதேச நரம்பியல் மனநல சிகிச்சை நிபுணர் டாக்டர் இ.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு 360 டிகிரி முறையில் உடல், மனம் மற்றும் மூளையை மதிப்பீடு செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பழங்கால முறையில், நவீன மருத்துவத்தை உட்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை;

கோவையில் செயல்பட்டு வரும் தலைசிறந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையானது, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையால், கடந்த 1975-ம் ஆண்டு கோவை மாநகரின் மையப்பகுதியில் தொடங்கப்பட்டு, பல்வேறு மருத்துவ வரலாறுகளைப் படைத்து பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிநவீன சிகிச்சை முறைகளால் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் இங்கு குணப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

https://www.youtube.com/c/SriRamakrishnaHospital
https://www.facebook.com/SriRamakrishnaHospital
https://en.wikipedia.org/wiki/SriRamakrishna_Hospital

மேலும் படிக்க