December 6, 2021
தண்டோரா குழு
கோவை அவினாசி சாலை நேஷனல் மாடல் பள்ளி அருகில் பில்லர் 129 எனும் பெயரில் டிரைவ்-இன் ரெஸ்டாரன்ட் உணவகம் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது.
இந்த உணவகத்தினை, அன்னபூர்ணா குரூப் ஆப் ஹோட்டல் தலைவர் டி.சீனிவாசன், முன்னாள் திமுக எம்எல்ஏ நா. கார்த்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.மேலும், உணவகத்தில் அமைக்கப்பட்ட கார் சார்ஜிங் அமைப்பையும் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் உணவகத்தின் உரிமையாளர் உமாமோகன் சந்தர்,மோகன் சந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உணவகம் குறித்து உரிமையாளர் உமாமோகன் சந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கோவையில் முதன்முறையாக டிரைவிங் ரெஸ்டாரன்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் காரில் அமர்ந்தப்படியே சைனீஸ், அரேபியன், பர்மீஸ், தாய்லாந்து போன்ற மல்டி கசின் உணவுகளை சுவைக்கலாம்.
20 ஆண்டுகளாக உணவு சேவையை அளித்து வரும்நிக்பின் ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீஸ் உணவு சேவை நிறுவனம், தற்போது இந்த உணவகத்தை தொடங்கவுள்ளனர். காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த உணவகம் செயல்படும் என்றார்.