• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முகமூடி அணிந்தபடி வந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிம் மனு

February 28, 2020

கோவை மாவட்டத்தில் விளைநிலங்களில் வனவிலங்குகள் பிரச்சினைக்கு மறைந்த விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி முன்வைத்த தீர்வுகளை செயல்படுத்த கோரி சிவசாமியின் முகமூடி அணிந்தபடி வந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர்,மறைந்த விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமியின் உருவம் பொறித்த முகமூடி அணிந்து வந்து மனு அளித்தனர். வனவிலங்குகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடமும், அமைச்சரிடமும் பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர் . எனவே தொடரும் வன விலங்குகள் பிரச்சனைக்கு மறைந்த விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி அவர்கள் முன்வைத்த
வனத்துக்கு வெளியே வரும் காட்டு யானைகளை சுட்டு விரட்ட வேண்டும்,பிற விலங்குகளை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்ற தீர்வை நடைமுறை படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் விளை நிலங்களில் மயில்களின் தொந்தரவு அதிகமாக இருப்பதாகவும் , சிறுத்தை உட்பட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி முன்வைத்த தீர்வை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் படிக்க