• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மிண்னணு வாக்கு இயந்திரங்களுக்கு சின்னங்கள் பொருத்தும் பணி துவக்கம்

February 11, 2022 தண்டோரா குழு

தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் மிண்னணு வாக்கு இயந்திரங்களுக்கு சின்னங்கள் பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளன.

மிண்ணனு வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பழுது நீக்கப்பட்டு சின்னங்கள் பொருத்தப்பட்டு சீல் வைத்து எடுத்து வைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்தவுடன் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், தேர்தல் மேற்பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்ட பின் அந்தந்த வாக்கு சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படும். அதுவரை பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.

இதனால் இம்மிண்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை மற்றும் அறையை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 1290 வாக்கு சாவடிகள், 33 பேரூராட்சிகளுக்கு 632 வாக்குசாவடிகள், 7 நகராட்சிகளுக்கு 390 வாக்குசாவடிகள் என மொத்தம் 2312 வாக்குசாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க