• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் துவக்கம்

July 4, 2018 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை சேர்ந்த 120 பள்ளிகள் கலந்து கொண்டன.

மாவட்ட விளையாட்டு துறை சார்பில், 19வது ‘கே.வெங்கடேசலு நினைவு’ கோப்பைக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி,சுகுணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் துவங்கியது. முன்னதாக போட்டிகளை பள்ளி தாளாளர் சுகுணா லஷ்மி நாராயணசாமி துவக்கி வைத்தார்.

14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.இதில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம்,மேட்டுப்பாளையம்,பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து
100க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.இது போன்று போட்டிகள் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதோடு மாநில,தேசிய அளவில் கலந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பாக இது போன்ற போட்டிகள் உள்ளதாக பள்ளி மாணவிகள் தெரிவித்தனர்.மேலும் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என பள்ளி முதல்வர் அமுதா தெரிவித்தார்.

மேலும் படிக்க