April 25, 2018
தண்டோரா குழு
கோவையில் பார்வையற்றவர்களையும்,அவர்களுக்காக தேர்வு எழுதும் தன்னார்வலர்களையும் இணைக்கும் விதமாக மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளையும் அவர்களுக்காக தேர்வு எழுதும் தன்னார்வலர்களையும் இணைக்கும் விதமாக தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ளனர்.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொரு தேர்வு எழுதும் பொழுதும் அவர்களுக்காக உறுதுணையாக இருப்பது அவர்களுக்காக தேர்வு எழுதும் தன்னார்வலர்கள்.ஆனால்,பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளுக்கு நேரடியாக,தேர்வு எழுதும் தன்னார்வலர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
இதனால் பல முறை அவர்களுக்கு தேர்வு எழுதுவதற்காக ஆட்கள் கிடைக்காததால் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதுவது தடைப்படுகிறது.எனவே பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளையும்,அவர்களுக்காக தேர்வு எழுதும் தன்னார்வலர்களையும் இணைக்கும் வகையில் சீர் செய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் புதிய மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளனர்.
இந்த மொபைல் ஆப்பை ஆண்ட்ராய்டு மொபைல்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.குறிப்பாக இதில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அனைவரும் யாருடைய உதவியும் இல்லாமல் தாமாகவே பயன்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளனர்.
பார்வையற்றவர்கள் தேர்வு எழுத ஆட்கள் தேடுவதற்கான விவரங்களை இதில் நேரடியாக பதிவிடலாம்.பிறகு தேர்வு எழுத தயாராக இருக்கும் தன்னார்வலர்களும் இந்த ஆப்பை பயன்படுத்தி யாரெல்லாம் தேர்வு எழுதுவதற்காக அழைக்கிறார்கள் என்பதையும் நேரடியாக தெரிந்து கொல்லலாம்.அவ்வாறு தன்னார்வலர்கள் தயாராக இருந்தால் அதனை பார்வையற்றவர்களுக்கு நேரடியாக இந்த ஆப் மூலம் தெரிவிக்கலாம்.
பிறகு அவர்களை தொடர்பு கொண்டு தேர்வு எழுத செய்ய முடியும்.இதன் மூலமாக பார்வையற்றவர்களுக்கும் தன்னார்வலர்களையும் இணைக்கும் வகையில்,இந்த மொபைல் ஆப் அமைந்து உள்ளதாக இதனை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது இந்த மொபைல் ஆப் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இந்த மொபைல் ஆப் அறிமுகம் செய்யவுள்ளனர்.
தற்போது,ஆங்கிலத்தில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து எதிர்காலத்தில் மற்ற மொழிகளிலும் அறிமுகம் செய்யவுள்ளனர்.அனைத்து பார்வையற்றவர்களும்,தன்னார்வலர்களும் இந்த ஆப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.