• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

May 14, 2018 தண்டோரா குழு

கோவையில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் 50 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் ஆர்வமாக பங்கேற்று வருகின்றனர்.

தனியார் விளையாட்டு மையம் சார்பில் கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிகளில்,கோவை,சென்னை,கன்யாகுமரி,மதுரை,தேனி, சேலம்,விருதுநகர்,நாகப்பட்டினம்,திருச்சி என 14மாவட்டங்களை சேர்ந்த குழுக்கள் பங்கேற்றுள்ளன.

அமர்ந்து விளையாடும் கைப்பந்து,கால்பந்து போட்டிகள்,அமர்ந்து மற்றும் நின்றபடியாக விளையாடும் குண்டெறிதல்,சதுரங்கம் ஆகிய நான்கு போட்டிகளில் 16 வயதிற்குட்பட்டவர்கள், அதற்கும் மேல் மற்றும் ஓபன் என மூன்று பிரிவுகளில் நடைபெறுகின்றன.

மேலும்,போட்டிகளில் அதிக புள்ளிகள் பெரும் குழு வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் என தனி தனியாக நடைபெறும் போட்டிகளில் 30ஆயிரம் மதிப்புள்ள ரொக்கப்பரிசும்,50ஆயிரம் மதிப்புள்ள கோப்பைகளும்,பதக்கங்களும்,சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க