• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

April 5, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 7 பேரை பணியில் இருந்து நீக்கிய, சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளரை கண்டித்து, இன்று கோவை மேற்கு மண்டல சுகாதார அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில்,

‘‘கடந்த 5 ஆண்டு காலம் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், இன்றைக்கு பணிபுரிவதற்கு ஆட்கள் நிறையபேர் இருப்பதால்,உங்களுக்கு இங்கு வேலை இல்லை என்று மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளரும், சுகாதார மேற்பார்வையாளரும் தெரிவித்துள்ளனர்.

வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ள இந்த 7 தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்ககோரி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களின் குடும்பங்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும்’’ என்றனர்.

மேலும் படிக்க