December 9, 2021
தண்டோரா குழு
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிக்கதாசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்புரோஸ். பழைய இரும்பு வியாபாரி. இவர் மகள் அபிராமி (17). இவர் பிளஸ் 2 படித்து வந்தார். அம்புரோஸ் தனது மகளை அடிக்கடி கண்டித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த அபிராமி தனது வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிமருந்து குடித்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் இறந்தார். இது தொடர்பாக காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்தவர் பிரசானன் (43). கால் டாக்ஸி டிரைவர். கடன் பிரச்சினையால் இவர் காரை விற்பனை செய்து விட்டார். இதனால் மன விரக்தியில் காணப்பட்ட இவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.