• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாணவரின் பிறப்புறுப்பை காயப்படுத்திய தலைமை ஆசிரியர் மீது புகார்

December 13, 2019

பீகார் மாநிலத்தை சேர்ந்த கேம்ராம் சிங் என்பவர் கோவை அடுத்த சூலூர் விமான படை தளத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன்கள் உதித்குமார் சிங் மற்றும் முதித்குமார் சிங் ஆகியோர் அங்குள்ள கேந்திரியா வித்யா பள்ளியில் 11 மற்றும் 9 வகுப்பு படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மேகனாதன் இருவரையும் வகுப்பறையில் இருந்து வெளியேற்றி விட்டு, தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஆசிரியர்கள் தமிழரசி, திவ்யா, மற்றும் ஒரு ஆசிரியை ஆகியோர் உதித்குமார் சிங்கின் கைகளை பிடித்துக்கொள்ள , தலைமை ஆசிரியர் மேகநாதன் மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து இழுத்து காயம் ஏற்படுத்தியதோடு, ஆசன வாயிலில் விரலா குத்தி காயம் ஏற்படுத்தியுள்ளார்.

பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய மாணவர்கள், நடந்தவற்றை தாய் சீமா குமாரியிடம் கூற, இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, இரண்டு குழந்தையும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.ஏற்கனவே தலைமை ஆசிரியர் மேகனாதன் இது போல், பல முறை இந்த மாணவர்களிடம் தவறாக நடந்து வந்த போது, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவர்களின் அம்மா சீமா குமாரி புகார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க